சாம்சங் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் கேலக்ஸி நோட் 9 போனை அறிமுகம் செய்தது தற்போது முன்பதிவுகள் நடந்து வருகிறது.
மேலும், முன்பதிவுக்காக
பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி நோட் 9 வாங்குவோரை கவரும் வகையில், ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Don't have a time? Watch this....
Quick Video :
Images:
ஏர்டெல்:
கேலக்ஸி நோட் 9 போனை வாங்க விரும்புவோர் ஏர்டெல் தளத்தில் ரூ.7900 செலுத்தி புதிய நோட் 9 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பெறலாம். மீதித்தொகையை மாதம் ரூ.2999 என 24 மாதத்திற்கு செலுத்தலாம்.
2 ஆண்டு தவணை:
இந்த கேலக்ஸி நோட் 9 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை இரண்டு ஆண்டுகள் தவனை மற்றும் ஏர்டெல் திட்டத்திற்கான கடடணம் ரூ.79,876 ஆகும். இத்துடன் மாத தவணை முறையில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது.
100 ஜிபி டேட்டா:
100 ஜிபி டேட்டா, அன்லிமிட் வாய்ஸ் கால், ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் டிவி, வின்க் மியூசிக் சேவைகளுக்கு இலவச சந்தா உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.
தற்போது முன்பதிவு:
நோட் 9 ஸ்மாரட்போனை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்வோருக்கு ரூ.4999 விலையில் கியர்ஸ்போட் ஸ்மார்ட்வாட்ச் சாம்சங் வலைதளம் வழங்குகிறது. பதிவு செய்யப்படும் இந்த போன் வரும் 22ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது
Dinesh Kumar S is a 23-year-old System Administrator who enjoys playing games, listening to music and learning new technology. He is friendly and generous, but can also be very lazy and crazy.
Share this
Android