
ஜியோ போன் வெற்றியைத் தொடர்ந்து தனது புதிய ஜியோ போன்2 ஐ சுதந்திர தினத்தன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது ஜியோ நிறுவனம். அதில் திடீர் மாற்றத்தை இப்பொழுது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Don't have time? Watch This....
Quick Video :

ஆகஸ்ட் 16 மதியம் 12 மணிக்கு விற்பனை
ஆகஸ்ட் 16 மதியம் 12 மணிக்கு ஜியோ போன் 2 இன் அதிரடி விற்பனைத் துவங்குகிறது. Jio.com வலைத்தளம் மற்றும் MyJio ஆப் இல் உங்களுக்கான ஜியோ போன் 2 ஐ வாங்கலாம். இந்த புதிய ஜியோ போன் 2 கிவெர்ட்டி கீபேட் சேவையுடன் வாட்ஸ் ஆப், யூடுப், முகப்புத்தகம், டிவிட்டர் போன்ற சேவைகளுடன் விற்பனைக்கு வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆம் ஆண்டு பொது கூட்டம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆம் ஆண்டு பொது கூட்டத்தில் ஜியோ வின் புதிய ஜியோ போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.2,999 எனவும் அனைத்து ஜியோ கடைகள் மற்றும் ஜியோ வலைத்தளம் மற்றும் ஜியோ செயலி மூலம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதிரடி ஆஃபர் ரூ.501
இத்துடன் இன்னொரு அதிரடி ஆஃபர் ஐ ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்து பழைய மொபைல் போன்களை வேண்டுமானாலும் கொடுத்து, வெறும் ரூ.501 செலுத்தி ஜியோவின் புதிய மொபைலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஜியோ போன் 2 விபரக்குறிப்பு:
- 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே- 2 மெகா பிக்சல் பின் கேமரா மற்றும் விஜிஏ முன் கேமரா
- டூயல் சிம் வசதி
- 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள் சேமிப்பு
- 128ஜிபி எக்ஸ்பெண்டபிள் சேமிப்பு
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- என்.எப்.சி
- எப் எம் வசதி
- 2000 எம்ஏஎச் பேட்டரி
விலை : ரூ.2,999
Also See :
நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம்
https://youtu.be/UMzJrimNwkk
ஜியோ புயல்: 1 நொடிக்கு 1ஜிபி
https://youtu.be/IM-KIhMnLJU
₹ Indian Rupee (ரூபாய்) and English(India) in your PC
https://youtu.be/OSwvXfIvbD0
JioFi Buy? உசார் ஆய்கங்க
https://youtu.be/PYn_cld8MW8
JioFi @499 offer?
https://youtu.be/t5kImFuYAwg
How to access blocked websites
https://youtu.be/NnpHQiqa9mw