இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மற்ற போன்கள் விற்பனையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. சந்தையில் சியோமி நிறுவனம் தனது ஆதிக்கத்தை
செலுத்தி வருவதாக ஐடிசி இந்தியாவின் காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய செல்போன் சந்தை கடந்த ஆண்டை காட்டிலும் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைனில் செல்போனை விற்பனை செய்வதே முக்கிய காரணம் எனவுத் தெரிவந்துள்ளது.
சியோமி- சாம்சங்
சியோமியை சாம்சங் நிறுவனம் முந்தியதாக கவுன்ட்டர்பாயிட் ஆய்வு வெளியிட்டியிருந்தது. தற்போது இதற்கு முரணமாக இந்திய சந்தையில், சியோமி நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிமுதலிடம் பிடித்துள்ளதாக ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி முதலிடம்:
இந்திய சந்தையில், தொடர்ந்து முதலிடம் பிடித்து இருக்கும் சியோமி நிறுவனம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையில் வளர்ச்சியடைந்துள்ளது. சியோமியின் விற்பனையில் ஆன்லைன் மட்டும் 56%, ஆப்லைனில் 33 % பெற்றுள்ளது.
ரகசியம்:
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் மற்ற செல்போன் நிறுவனங்களை அரசு வளர்ச்சியால் சூரையாடியுள்ளது. இதற்கு காரணம் மலிவான விலையில், புதிய தொழில் நுட்பம், புதிய மாடல்கள், ஏராளமான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணங்களை சியோமி நிறுவனம் கொண்டுள்ளது. மேலும், ஆன்லைன் மார்க்கெட்டிங், ஆன்லைன் விற்பனையில் கவர்ச்சி, விலை உள்ளிட்ட காரணங்கள் முதன்மையானதாக இருக்கின்றன.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் வளர்ச்சி:
ஆன்லைன் பிரிவில் ஹூவாய் ஹானர் பிராண்டு தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 8% வளர்ச்சியை இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. ஒன்பிளஸ், ரியல்மி உள்ளிட்ட செல்போன்களும் ஆன்லைன் சந்தைக்கு 44% வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. தற்போது இந்திய ஸ்மார்ட் போன் சந்தை வளர்ச்சி 36% ஆக அதிகரித்துள்ளது.
Dinesh Kumar S is a 23-year-old System Administrator who enjoys playing games, listening to music and learning new technology. He is friendly and generous, but can also be very lazy and crazy.